கத்தாரில் ஒரு சாதனை சுட்டெரிக்கும் பாலைவனத்தில் #இயற்கை #விவசாயம் செய்து சாதித்து வரும் #கத்தார் பற்றி சமீபத்திய பதிவுகளில் எழுதியிருந்தேன். ஒருமுறை சாதிப்பது எல்லாம் சாதனையே இல்லை... சாதித்துக் கொண்டே இருப்பதுதான் சாதனை! அண்டை நாடுகளால் தரை மற்றும் வான் வழிப் போக்குவரத்துத் தொடர்பு முற்றிலும் மூடப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளான கத்தார், சோர்ந்து சோம்பி உட்கார்ந்து விடவில்லை. எவரையும் சார்ந்து கையேந்தி இராமல், இரவு பகலாக கடுமையாக உழைத்து விவசாயம், உணவு உற்பத்தி, தொழில், பொருளாதாரம் என அனைத்திலும் தற்சார்பு வாழ்வியலைப் புகுத்தி மாற்றி அமைத்தது. அதன் ஒரு படியாக, 12 சதுர கி.மீ பரப்பளவில் சீரான இடைவெளியில் ஒரு லட்சம் மரங்களை வளர்த்து, பாலைவனத்தின் நடுவே அடர்ந்த காட்டை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது. என்னது? சுட்டெரிக்கும் பாலைவனத்திற்கு நடுவே மனிதன் உருவாக்கிய காடா? விளையாடாதீங்க தம்பி.... காட்டு மரங்களுக்கு நீர் ஆதாரம் வேணுமே? அதெல்லாம் திட்டமிடாமலா? ஆம்! 280,000 சதுர மீ. பரப்பளவில் மிகப் பெரிய ஏரிகளை வெட்டி அதில் அரிதாகப் பெய்யும் மழை நீர் சேமிக்கப் பட்டுள்ளது. அ...
make different in your life