அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்சி ஆகியோர் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கிய ‘ஆரம்பம்’ படம் தீபாவளிக்கு முன் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நயன்தாரா அளித்த பேட்டி வருமாறு....
தீபாவளியன்று சென்னையில் இருந்தேன். ‘ஆரம்பம்’ படம் பார்த்தேன். மாலையில் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றேன். அஜித்துடன் நான் நடித்துள்ள மூன்றாவது படம் ‘ஆரம்பம்’.
அஜித் தன்னை சுற்றி இருப்பவர்களை அக்கறையோடு கவனித்துக் கொள்கிறார். எனவேதான் சினிமாவில் இருப்பவர்களுக்கும் வெளியில் இருப்பவர்களுக்கும் அஜித்தை பிடிக்கிறது.
நான் 10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். வெற்றி தோல்விகளையும் பார்த்து விட்டேன். என் வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்துள்ளேன். இரண்டு வருடத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தேன். இரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் சினிமா துறையினரும் வரவேற்றுள்ளனர்.
சினிமாவில் விடா முயற்சியும், நேர்மையான உழைப்பும், தன்னம்பிக்கையும் கடவுள் அருளும் இருந்தால் ஜெயிக்கலாம். எனக்கு அது இருக்கிறது.
கவர்ச்சி என்பது உடலோடு சம்பந்தப்பட்டது அல்ல. நீச்சல் உடையை விட பாவாடை தாவணியில் அதிகம் கவர்ச்சியாக தோன்ற முடியும். கதாபாத்திரத்துக்கு பொருந்தினால் கவர்ச்சியாக நடிக்கலாம்.
ஆர்யாவுக்கும், எனக்கும் காதல் இல்லை. இருவரும் நண்பர்களாகத்தான் பழகுகிறோம். சினிமாவை தவிர எனக்கும், ஆர்யாவுக்கும் தனித்தனி வாழ்க்கை உள்ளது.
காதல் இருந்தால் வெளிப்படையாக அறிவிப்பேன். நாங்கள் நண்பர்கள்தான். நாங்கள் படங்களில் பொருத்தமான ஜோடியாக தெரிகிறோம். எனவேதான் இப்படி வதந்தி பரவுகிறது. நான் இன்னும் தனியாகத்தான் இருக்கிறேன்.
இவ்வாறு நயன்தாரா கூறினார்.

Comments
Post a Comment