காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அவர் எங்கு சென்றாலும் பாதுகாப்புபடை வீரர்களும் உடன் சென்று அவரை சூழ்ந்து நின்று பாதுகாப்பு அளிக்கிறார்கள்.
ஆனால் நேற்று இரவு ராகுல் காந்தி டெல்லியில் தனது வீடு அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலையில் பாதுகாப்பு அதிகாரிகளோ சாரதியோ இல்லாமல் தனியாக காரில் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் நாய்களுடன் உலா வந்தார்.
ரேஸ் கோர்ஸ் சாலை சிக்னலில் வந்தபோது அங்கு ஒரு கார் நின்றிருந்தது. காரை ஓட்டி வந்தவர் திடீர் என்று கார் கண்ணாடியை இறக்கி விட்டு பெண்ணிடம் அவரது நாய்க்குட்டி பற்றி பேசினார்.
என்ன உணவு கொடுக்கிறீர்கள்? எப்படி அதன் உடல் நலத்தை பேணுகிறீர்கள்? என்று பெண்ணிடம் விசாரித்தார். அவரைப் பார்த்ததும் அந்தப் பெண்ணுக்கு ஆச்சரியம். காரணம் காரில் இருந்தவர் ராகுல் காந்தி.
சாரதி இருக்கையில் அமர்ந்து அவரே காரை ஓட்டிவந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இல்லை. காரில் அவருடன் விலை உயர்ந்த பிரவுனி ரக நாய்கள் இருந்தன.
ராகுல்காந்தியும் தனது பிரவுனி பற்றி அந்தப் பெண்ணிடம் விவரித்தார்.
பாதுகாப்பு வளையத்தை மீறி ராகுல்காந்தி நள்ளிரவில் காரில் தனியாக வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தியைப் பார்த்த பெண் தனது பெயர் விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.
இதுபற்றி இணைய தள பேஸ் புக்கில் பலரும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் பார்த்தது ராகுல்காந்தியைப் போன்ற ஒருவராக இருக்கலாம் என்று ஒருவர் கிண்டல் அடித்துள்ளார்.

Comments
Post a Comment