தற்போது ஆரம்பம் படத்தை முடித்து விட்டு வீரம் படப்பிடிப்பில் இருக்கிறார் அஜித். இந்த நிலையில், ஆரம்பம் படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து வருவதோடு, படத்தை தீபாவளிக்கு வெளியிடயிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து அஜித் நடித்து வரும் இன்னொரு படமான வீரம் படமும் பொங்கலுக்கு வெளியாவது அஜித்தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டது.
இதனால் தீபாவளி, பொங்கலுக்கு வெளியாகவிருந்த சில படங்கள் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில், ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் விஜய் நடித்து வரும் ஜில்லா படமும் ஒன்று.
இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடும் முடிவில் இருந்தனர். ஆனால், இப்போது அஜித்தின் வீரம் படம் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வெளியாவது தியேட்டர் பிரச்சினை உருவாக்கும் என்று ஜில்லா படத்தை பொங்கலுக்குப் பிறகு வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.
ஆக, அஜித்தின் வீரம் படத்தினால் விஜய்யின் ஜில்லா பின்வாங்கியிருக்கிறது.

Comments
Post a Comment