முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் 33 சம்பவங்கள் இடம்பெற்ற பின்பும் அரசாங்கம் மௌனம் காக்கிறது. அரசு இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்காது. என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அங்கத்தவர்கள் சேர்த்துக் கொள்வதற்காக அக்குறணை நகரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; அக்குறணை பிரதேசம் கண்டி மன்னரால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதாகும். போர்த்துக்கேயர்கள் அக்குறணை வழியாகக் கண்டிக்குச் செல்ல முயற்சித்த போது அக்குறுணையில் அவர்களைத் தடுத்து வைத்து தாமதப்படுத்தி கண்டி மன்னனுக்கு விடயத்தை அறிவித்துள்ளனர். இதன் காரணமாக புத்தரின் புனித தந்தத்தை ஹங்குரங்கெத்த பிரதேசத்துக்குக் கொண்டு சென்று பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. இன்று முஸ்லிம்களுக்கு எதிராக சில சக்திகள் களத்தில் இறங்கி உள்ளன. அரசாங்கம் இதனைப் பார்த்துக்கொண்டு மௌனம் காக்கிறது. நான் இதைப் பற்றிப் பாராளுமன்றத்தில் பேசிய போது என்னைக் குற்றம் கூறுகின்...
make different in your life