கூகுளில் அதிகம் 'செக்ஸ்' சொல்லை உபயோகித்த நாடாக இலங்கை: தொடர்ச்சியாக 8 வருடங்களாக முதல் 10 இடங்களுக்குள்!
இவ்வாண்டில் கூகுள் தேடல்பொறியில் 'செக்ஸ்' என்ற சொல்லை அதிகம் தேடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இணையத்தளங்களின் Google Trends எனப்படும் அதன் தேடல் பொறியில் தேடப்படும் சொற்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை அளிக்கும் இணையத்தளம் மூலமாகவே இவ்விபரம் வெளியாகியுள்ளது.
இப்பட்டியலில் இலங்கைக்கு அடுத்த படியாக இந்தியா உள்ளது. இப்பட்டியலில் உள்ள முதல் 10 நாடுகள் வருமாறு.
Top 10 Countries where People Googled the term ‘sex’ in 2012
1. Sri Lanka
2. India
3. Papua New Guinea
4. Ethiopia
5. Pakistan
6. Bangladesh
7. Vietnam
8. Nepal
9. Somalia
10. Cambodia
முதல் பத்து இடங்களில் அதிகப்படியான நாடுகள் ஆசியாவைச் சேர்ந்தவையாகும்.
இலங்கையில் 2012 ஆம் ஆண்டில் ஏப்ரல் 8 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதி வரை செக்ஸ் என்ற வார்த்தை கூகுளில் அதிகப்படியாக தேடலுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியாகத் திகழ்கின்றது.
இதற்கு அடுத்தப்படியாக மே 6 முதல் 12 வரையான காலப்பகுதியும், டிசம்பர் 23 முதல் 29 வரையான காலப்பகுதியும் திகழ்கின்றன.
இவ்வருடத்தில் குறைந்த தடவைகள் தேடலுக்குள்ளான காலப்பகுதியாக ஒக்டோபர் 14- 27 திகழ்கின்றது.
பிரதேசங்களின் அடிப்படையில் கொழும்பு மற்றும் கண்டி நகரங்களிலிருந்தே அதிக தேடல் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளமையையும் அவ் இணையத்தளத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து அதிகம் தேடப்பட்டவையாக கீழே காட்டப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சொற்கள் திகழ்கின்றன.
கூகுளின் குறித்த இணையத்தளத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதலான தரவுகளை பெற்றுக்கொள்ளமுடியும்.
இதன் அடிப்படையில் 'செக்ஸ்' என்ற வார்த்தையை கூகுள் தேடும் போக்கானது இடையிடையே குறைந்துள்ள போதிலும் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வரும் போக்கினையே காட்டி நிற்கின்றது.
இவ்வார்த்தையானது அதிகப்படியாக தேடப்பட்ட காலப்பகுதியாக 2010 ஆண்டு ஏப்ரல், ஜூலை மற்றும் செப்டம்பர் காலப்பகுதி திகழ்கின்றது.
இவ் எட்டு வருட காலப்பகுதியில் அதிகம் தேடப்பட்ட 'செக்ஸ்' என்ற சொல்லுடன் சம்பந்தப்பட்ட தேடல் கோரிக்கைகள் வருமாறு.
இதேவேளை 2004 ஆம் ஆண்டிலிருந்தான தேடல் போக்கினை அவதானிக்கும் பொழுது கடந்த வருடமும் அதாவது 2011 ஆம் ஆண்டிலும் இலங்கை இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
இதேபோல் 2004 ஆம் ஆண்டு முதல் 'செக்ஸ்' என்ற வார்த்தையை அதிகப்படியாக உபயோகித்த முதல் 10 நாடுகளுக்குள் இலங்கை இடம்பெற்று வந்துள்ளது.
இவற்றை குறித்த புள்ளிவிபரத்தினூடாக உறுதி செய்யமுடிகின்றது.
மேற்படி புள்ளிவிபரமானது கூகுள் தேடல் பொறியில் மட்டும் தேடலுக்குட்படுத்தப்பட்ட 'செக்ஸ்' என்ற வார்த்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய தேடல்கள் பற்றியதாகும்.
இப் புள்ளிவிபரத்தினை அலசும் பொழுது ஆபாசமான விடயங்களைத் தேடுவோரின் எண்ணிக்கை இலங்கையில் ஒப்பீட்டளவில் மிக அதிகமாக உள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளது.
இதைத்தவிர பல தேடல் பொறிகள் தற்போது பாவனையிலுள்ளன. இவற்றையும் கணக்கிலெடுத்தால் இத்தொகை எதிர்பார்க்காத அளவு அதிகரிக்கலாம்.
இது தவிர தேடல் பொறிகளை உபயோகிக்காமல் நேரடியாக ஆபாசத்தளங்களுக்கு விஜயம் செய்வோர் உள்ளமையும் கணக்கிலெடுக்கப்படவேண்டும்.
ஆபாசத்தளங்களை தவிர்க்கும் நோக்குடன் இலங்கை அரசு பல நடவடிக்கைகளை கடந்த காலங்களில் மேற்கொண்டுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா? முதலீடு - அவசியமில்லை நேரம் - 15 நிமிடம் / தினமும் தனி கணிணி வேண்டும் (கைப்பேசி, டேப் அனுமதி கிடையாது) முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி? உங்களின் ஓய்வு நேரத்திலும், முதலீடு இல்லாமலும், இணையத்தில் பணம் சம்பாதிக்க இது ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி. PTC தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவரா? முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள் இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவேஇணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது. இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால், ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை... எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை... தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது... உங்களுக்கு ஆங்கிலம் சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வெகு சுலபமாக சம்பாதிக்கலாம் ... உலகின் பெரும்பாலா...
Comments
Post a Comment