Skip to main content

(i)Watch

தொழிநுட்ப உலகில் புதுமையான படைப்புகளை புகுத்தி அதற்கு எம்மை அடிமையாக்குவது ஓன்றும் அப்பிள் நிறுவனத்திற்கு புதிதல்ல. both; text-align: center;">
அதேபோல் அதன் புதுமையான சாதனங்கள் வெளியாக முன்னரே அவை தொடர்பில் செய்திகள் வெளியிடுவது ஒன்றும் ஊடகங்களுக்கும் புதியதல்ல. ஐபோன், ஐ பேட், வரிசையில் ஐ(கடிகாரம்) ஒன்றை அப்பிள் இரகசியமாக தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக் கடிகாரமானது 1.5 அங்குல தொடுதிரையைக் கொண்டிருப்பதுடன் புளூடூத் மூலம் ஐ போன் போன்ற சாதனங்களுடன் தொடர்புகொள்ளும் வசதியையும் கொண்டிருக்குமென ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. both; text-align: center;">
குறித்த கடிகாரத்தின் திரையானது இண்டியம் டின் ஒக்சைட் (Indium tin oxid) பூச்சைக் கொண்ட மேற்பரப்புடன் கூடிய ஓ.எல்.ஈ.டி வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐ.ஓ.எஸ் மூலம் இக்கடிகாரம் இயங்குமெனவும் இதனூடாக அப்ளிகேசன்களை தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும் என நம்பப்படுகின்றது. இன்னும் உத்தியோகபூர்வமில்லா இச் சாதனம் தொடர்பில் தொழிநுட்ப உலகின் கவனம் தற்போது திரும்பியுள்ளது. இதேவேளை இதேபோன்ற தொழிற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய பெபெல் என்ற கடிகாரம் கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிட