Skip to main content

ஆரம்பம் - விமர்சனம்

'தல' படத்திற்கு எவரும் எதிர்பார்ப்புடன் செல்வதில்லை. ஏனென்றால் அண்மைக் காலங்களில் தல படங்களின் இடம்பெற்ற கடந்தகால கசப்பான அனுபவங்கள் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது. 

இளையதளபதி படம் எப்போதாவது ஊற்றிக்கொள்ளும் என்றால், தல படம் எப்போதாவது ஹிட்டடிக்கும். ஆனால் இப்போது வரை தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் மிகப்பெரிய ஓப்பனிங் அஜித்திற்கு இருக்கிறது. ரசிகர் மன்றங்களைக் கலைத்தாலும் ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கவே செய்கிறது. வெளிநாடுகளிலும் இதற்கு விதிவிலக்கல்ல.
அஜித்- நயன்தாரா, ஆர்யா- நயன்தாரா இரண்டு கூட்டணியுமே சமகால தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்தஇ வருகின்ற கூட்டணிகள். இவர்கள் மூன்றுபேரும் இணைந்தால் கேட்கவா வேண்டும்..? மூன்று மணிநேர ஆக்சன். இறுதிவரை தொய்வில்லாமல் அட்டகாசமாக செல்கிறது. தயங்காமல் சொல்லலாம், தல-க்கு இன்னொரு மங்காத்தா..!
ஹொலிவூட் படத்தை சுட்ட மாதிரியும் இருக்கணும்... சுடாத மாதிரியும் தெரியனும். இது விஷ்ணுவர்தனுக்கு கைவந்த கலையாச்சே... அப்பப்ப ஹொலிவூட் படத்தை சுட்டுப் போட்டுள்ளார். ஹொலிவூட் கொப்பியாச்சே என்பதால் அங்கங்கே சுட்டிருக்கிறார். அதே கதைக்களம். ஹொலிவூட்டுடன் தென்னிந்திய மசாலாவை தூவி கார சாரமாக பரிமாறியிருக்கிறார்.
அரசியல்வாதிகள் ஊழல் மோசடியில் சம்பதிக்கும் பணத்தை சுவிஸ் வங்கியில் சேமிக்கின்றனர். இவ்வாறு சேமிக்கும் பணத்தை எடுத்து இந்தியன் வங்கிக்கு மாற்றுவது தான் படத்தின் முக்கிய கதையாகவுள்ளது.
அதற்காக, திரைப்படத்தின் வெளியீட்டுக்கு தடங்கலோ அல்லது தற்காலத்து அரசியல் பின்னணிகளே இல்லாத ஊழல் சம்பவத்தை கையாண்டுள்ளார் இயக்குனர்.
'புல்லட் புரூவ் ஜக்கெட்" வாங்கியதில் இடம்பெற்ற ஊழலாக இத் திரைப்படத்தில் கதையை கோர்த்திருக்கின்றனர். 
இத் திரைப்படத்தில் குறிப்பாக சுவிஸ் வங்கியில் உள்ள வங்கிக் கணக்கை ஹெக் செய்து பணப் பரிமாற்றம் செய்வதாக திரைக்கதையை அமைக்கும்போது ஹொலிவூட் கொப்பி தெளிவாகின்றது.
ஆரம்பத்தில் மும்பையில் உள்ள பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் தீவிரவாதிகளின் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி சின்னாபின்னாமாகிறது. அதற்கு காரணம் கைதுசெய்து வைத்துள்ள தீவிரவாதி துரானிதான் என்று மும்பை பொலிஸாக வரும் கிசோர் அறிந்து அவரது நெட்வேர்க்கை கண்டுபிடித்து அழிக்க அலைகிறார்.
இன்னொருபுறம் (ஏ.கே.) அஜித், நயன்தாராவுடன் சேர்ந்து இந்த நெட்வேர்க்கின் மேல்மட்ட அரசியல் தொடர்புகளை குறிவைத்து வேட்டையாடுகிறார். இடைவேளைவரை யார் வில்லன், யார் ஹீரோ என்று வரும் குழப்பத்திற்கு இடைவேளைக்குப் பின் தெளிவு கிடைக்கிறது.
ஆர்யாவின் பாடசாலைத் தோழிகள் நயன்தாராவும், டாப்சியும். கல்லூரியில் படிக்கும்போது ஆர்யா பயங்கர கெட்டிக்காரான். கணனித்துறையில் அவருக்கு அனைத்தும் அத்துப்படி. கணனியில் ஊடுருவி அதாவது ஹேக் செய்து கல்லூரி விடைத்தாளில் கைவைக்கும் அளவுக்கு புத்திசாலி. அப்படி உதவப்போய் டாப்சியின் கடைக்கண் பார்வையில் சிக்குகிறார். கல்லூரி மாணவராக ஆர்யா வரும் கெட்டப் செம.. தமிழ் சினிமாவில் புதிய யுத்தி. திரையில் பாருங்கள், ஆர்யா கலக்கியிருப்பார்.

ஆர்யாவின் ஹேக்கர் மூளையைத்தான் பிற்பாடு நயன்தாரா மூலம் அஜித் பயன்படுத்திக் கொள்கிறார். அதற்கு டாப்சியை வைத்து பிளக் மெயில் செய்து அந்தக் காரியத்தை சாதிப்பார். அஜித் பின்புலம் எதுவும் தெரியாமல் அவரை பொலிஸில் ஆர்யா சிக்கவைக்க, வேறு வழியில்லாமல் அந்த பிளாஸ்பேக்கை ஆர்யாவிடம் அவிழ்க்கிறார் நயன்தாரா..
அஜித் வழக்கம்போல இதிலும் ஒரு நேர்மையான அஸிஸ்டண்ட் கமிஷனர். அதுதவிர அன்டி டெரரிசம் படையணி (யுவுளு) இல் 'பொம் எக்ஸ்பேர்ட்" ஆகவும் இருக்கிறார் அதாவது வெடி குண்டுகளை செயலிழக்கச் செய்வதில் வல்லவர்.
மும்பையில் தீவிரவாதிகள் குண்டு வைத்தால் அதை செயலிழக்கச் செய்வது இதன் வேலை. அப்படி ஒரு தாக்குதலில் அவரின் சக 'பொம் எக்ஸ்பேர்ட்'டும் உயிர் நண்பனுமாகிய ராணா பலியாகிறார். இவரின் தங்கைதான் நயன்தாரா.
புல்லட் புரூப் ஜக்கெட்டு போட்டும் எப்படி குண்டு உடலைத்துளைத்தது என ஆராய்கையில், அது தரமற்ற புல்லட் புரூவ் என தெரியவருகிறது. உடனே மேலதிகாரியிடம் முறையிடுகிறார். அவரும் இதற்கு உடந்தை என பிறகு தெரியவர, இதில் 200 கோடிக்குமேல் ஊழல் நடந்திருப்பது வெளிப்படுகின்றது.
அந்த ஊழலை செய்திருப்பது மத்திய அமைச்சர் என்பதையும் கண்டுபிடித்து, இப்படி ஊழல் செய்த பணம் சுவிஸ் வங்கியில் வைப்பு செய்திருக்கும் உண்மையை கண்டறிகிறார் ஏ.கே. 
அதை மறைக்க ரானா குடும்பத்தில் அனைவரையும் விஷம் கொடுத்து கொன்று, அஜித்தையும் தீவிரவாதிபோல் உருவாக்கி அவரை ஆற்றில் தள்ளி கொலை செய்கிறது குறித்த அமைச்சரின் பட்டாளம். விஷம் குடித்த நயன்தாராவும் ஆற்றில் விழுந்த அஜித்தும் ஒருவாறு தப்பி இவர்களை பழிவாங்குவதுதான் மீதி கதை. 
படத்திற்கு மையபலம் அஜித்துக்கா ஆரியாவிற்கா எனபதில் குழப்பம். இதில் அஜித்தின் வில்லத்தன நடிப்பை குறைத்திருக்கலாம். படத்தில் அஜித்துக்கு வசனங்கள் அதிகமாக கிடையாது. அனைத்தும் ஆக்சன் தான். ஆனால் மொத்தமாக கிளைமாக்சில் கேப்டன் மாதிரி, ஊழல், இலஞ்சம், அரசியல் என சமகாலப் பிரச்சினைகளைப் பன்ச்களாக அடித்து பின்னியெடுக்கிறார். 
வழக்கம் போல இந்தப்படத்திலும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை தனது நடையை காட்டுகிறார் அஜித். ஆனால் அதுதான் அவரின் அட்டகாசமான ஸ்டைல் என்பதால் சலிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அதற்கு தல ரசிகர்களிடமிருந்து விசில் பறக்கிறது. ஆனால் தல யின் தொப்பை அப்பட்டமாக வயதை கூட்டிக் கண்பிக்கிறதே..
சுவிஸ் வங்கிக் கணக்கிலிருந்து டுபாயிலுள்ள அமைச்சர் மகளின் கணக்கிற்கு பணம் மாறிவிட, அதை ஆர்யாவும், அஜித்தும் ஹேக் செய்து தமது கணக்கிற்கு மாற்றும் அந்த பரபர பத்து நிமிடங்கள் அட்டகாசம்.
ஆனால் ஹொலிவுட் படத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப விறுவிறுப்பாக செல்கிறது ஆரம்பம். ஆனால் தல ரசிகர்களுக்கு இந்தப்படம் தீபாவளி விருந்து என்றே சொல்லலாம்.




ஆரம்பம் 'தல" யுக்கா!! அல்லது ஆரியாவுக்கா!!!
Rate this article: 

Comments

Popular posts from this blog

இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா

இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா? முதலீடு - அவசியமில்லை நேரம் - 15 நிமிடம் / தினமும் தனி கணிணி வேண்டும் (கைப்பேசி, டேப் அனுமதி கிடையாது) முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி? உங்களின் ஓய்வு நேரத்திலும், முதலீடு இல்லாமலும், இணையத்தில் பணம் சம்பாதிக்க இது ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி. PTC தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவரா? முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள் இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவேஇணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது. இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால், ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை... எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை... தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது... உங்களுக்கு ஆங்கிலம் சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வெகு சுலபமாக சம்பாதிக்கலாம் ... உலகின் பெரும்பாலா

பணத்தை சம்பாதிக்க பல வழிகள்

பணத்துக்கான அருமையை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஒரு அடையாள பொருளாக உருவாக்கிய பணம் நம்மை ஆட்டுவிக்கும் நிலைமை. ஒவ்வொரு அத்தியாவசிய தேவைகளுக்கும் பணம் அவசியமாகிறது. காசு கொடுத்தால் தான் கடவுளை கூட பார்க்க முடியும் என்ற உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பணத்தை சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. முயற்சி செய்யாமல் சோம்பேறியாக இருப்பவனை விட முயற்சி செய்து தோல்வி அடைபவன் ஆயிரம் மடங்கு மேல் கண்டிப்பாக அவனுக்கு வெற்றி நிச்சயம். பல பேருக்கு இணையத்தில் பணம் சம்பாதிக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது. அவர்களுக்கான என் பதில் கண்டிப்பாக பல வழிகள் இருக்கிறது இணையத்தில் சம்பாதிக்க. அதில் ஒரு வழியான ஈமெயில்கள் படித்தால் பணம் தரும் ஒரு தளத்தை அறிமுகம் செய்து வைக்கிறேன். இந்த சேவையை பல தளங்கள் நமக்கு வழங்கினாலும் நாம் பார்க்க போகும் தளம் மிகப்பிரபலமான தளம். பல ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. இந்த தளத்தில் முதலில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். இதனை அழுத்தி இன்றே இணையுங்கள் http://www.PaisaLive.com/register.asp?6191170-55402.7 தளத்தின் சிறப்பம்சங்கள்: நீங்கள் இந்த தளத்தில் சேர்ந்

How to Drive Manual

How to Drive Manual 1) Try to get on level ground. Put your seatbelt on once you get in. While learning, it's better to roll down the windows. This helps to better hear the engine sound and adjust the gear shifts accordingly. 2) The one on the far left is the clutch , the middle one is the brake, and then the gas/accelerator is on the far right.(CBA). This layout is the same for both left hand drive and right hand drive vehicles. 3Learn what the clutch does: 3) The clutch disengages the spinning engine from the spinning wheels and allows you to switch gears without grinding the teeth of each separate gear. Before you switch gears, the clutch must be depressed. 4 Adjust the seat position forward enough to allow you to press the clutch pedal (the left pedal, next to the brake pedal) fully to the floor with your left foot. 5 Press the clutch pedal and hold it to the floor. This would also be a good time to take note of how the travel