தல' படத்திற்கு எவரும் எதிர்பார்ப்புடன் செல்வதில்லை. ஏனென்றால் அண்மைக் காலங்களில் தல படங்களின் இடம்பெற்ற கடந்தகால கசப்பான அனுபவங்கள் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது. இளையதளபதி படம் எப்போதாவது ஊற்றிக்கொள்ளும் என்றால், தல படம் எப்போதாவது ஹிட்டடிக்கும். ஆனால் இப்போது வரை தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் மிகப்பெரிய ஓப்பனிங் அஜித்திற்கு இருக்கிறது. ரசிகர் மன்றங்களைக் கலைத்தாலும் ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கவே செய்கிறது. வெளிநாடுகளிலும் இதற்கு விதிவிலக்கல்ல. அஜித்- நயன்தாரா, ஆர்யா- நயன்தாரா இரண்டு கூட்டணியுமே சமகால தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்தஇ வருகின்ற கூட்டணிகள். இவர்கள் மூன்றுபேரும் இணைந்தால் கேட்கவா வேண்டும்..? மூன்று மணிநேர ஆக்சன். இறுதிவரை தொய்வில்லாமல் அட்டகாசமாக செல்கிறது. தயங்காமல் சொல்லலாம், தல-க்கு இன்னொரு மங்காத்தா..! ஹொலிவூட் படத்தை சுட்ட மாதிரியும் இருக்கணும்... சுடாத மாதிரியும் தெரியனும். இது விஷ்ணுவர்தனுக்கு கைவந்த கலையாச்சே... அப்பப்ப ஹொலிவூட் படத்தை சுட்டுப் போட்டுள்ளார். ஹொலிவூட் கொப்பியாச்சே என்பதால் அங்கங்கே சுட்டிருக்கிறார். அதே கதைக்க...
make different in your life