Skip to main content

Posts

Showing posts from January, 2014

நடிகர் விஜய் ரசிகர்களைத் துரத்தி அடித்த வடமாகாணசபை அமைச்சர் ஐங்கர நேசன்

இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் உதயன் பத்திரிகையில் விஜயைப் பற்றிய தவறான கருத்து வந்ததாக அங்குள்ள விஜய் ரசிகர்கள் சிலர் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எமது ஈழ மக்கள் படும் பாடு தெரியாது இப்படி கேவலம் கெட்ட செயல்களைச் செய்யாதீர்கள் என கோபத்துடன் ஏசியதாகத் தெரியவருகின்றது. இந்தியாவில் இவ்வாறான சினிமா நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர் மன்றங்கள் தற்போது இலங்கையிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. கூத்தாடிகளை தலையில் வைத்துக் கூத்தாடும் நிலையில் அங்குள்ள தமிழர்கள் இவ்வளவு காலமும் இருக்கவில்லை. சினிமாவை ஒரு பொழுது போக்காகவே கருதியிருந்தனர். ஆனால் தற்போது அங்குள்ள சிங்கள இராணுவம் இவ்வாறான செயல்களைத் தூண்டி இளைஞர்களைத் தவறான பாதையில் செல்ல முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை வடமாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனைப் போல் தமிழகத்திலும் யாராவது துணிந்து செயற்படுசார்களா?