தற்போதைய பல மெகா ஹீரோக்கள் சினிமாவில் நடித்து சம்பாதிப்பதைவிட விளம்பரப் படங்களில் நடித்துதான் பெரிய தொகையை சம்பாதித்து வருகிறார்கள். சிலர் இந்திய அளவிலான பெரிய கம்பெனிகளின் விளம்பர தூதராகவும் மாறி விடுகிறார்கள். விஜய், சூர்யா, விக்ரம், ஆர்யா, கார்த்தி என்று பல கோலிவுட் ஹீரோக்கள் இதில் முதலிடம் வகிக்கிறார்கள். அதேபோல் பல முன்னணி நடிகைகளும் இப்படித்தான் சம்பாதிக்கிறார்கள். ஆனால், அஜீத் மட்டும் எந்தவொரு விளம்பர படங்களிலும் நடிப்பதில்லை என்ற கொள்கையை சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்தே கடைபிடித்து வருகிறார். ஏன் என்ன காரணம்? என்று அவரைக்கேட்டால், ஒவ்வொரு விளம்பர படத்திலும் ஒரு குறிப்பிட்ட பொருள்களின் தரத்தை சொல்லித்தான் நடிக்க வேண்டியுள்ளது. அப்படி நடிகர்கள் பொருட்களின் தரத்தை சொல்லி நடிப்பதால் அதை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு பெரிய லாபம் கிடைக்கிறது. ஆனால், அப்படி தரமான பொருள் என்று சொல்லி நடிகர்கள் நடிக்கிற பெரும்பாலான பொருட்கள் தரமற்றவைகளாகத்தான் உள்ளன. இதனால் நடிகர்கள் செய்யும் விளம்பரத்தை நம்பி அந்த தரமற்ற பொருளை வாங்கும் ரசிகர்கள் ஏமாற்றப்படுகி...
make different in your life