கண்ணா லட்டுத் தின்ன ஆசையாவில் அம்மன் அவமதிப்பு : இந்து மகாசபா எதிர்ப்பு சந்தானம் நடித்து தயாரித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் இந்துக் கடவுளான அம்மன் மற்றும் பெண் பொலிஸை அவமதிக்கும் வகையிலமைந்துள்ள காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு இந்து மகாசபா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் தமிழ்நாடு இந்து மகாசபா அமைப்பு சார்பில் சென்னை போலிஸ் கொமிஸ்னரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் உட்பட பலர் நடித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படம் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ராமநாராயணன், நடிகர் சந்தானம் ஆகியோர் கூட்டாக தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சந்தானம், சீனிவாசன் மற்றும் ஹீரோவாக நடித்திருப்பவர்கள் குடிபோதையில் கையில் லட்டை வைத்துக் கொண்டு அம்மன் சாமியிடம் இருந்து சூலாயுதம், கிரீடம், அம்மனின் இடுப்பில் உள்ள ஒட்டியாணம் ஆகியவற்றை பறிப்பதுபோல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதுபோல பெண் போலிஸ் அதிகாரியின் இடுப்பை பிடித்து பெ...
make different in your life